ஐரோப்பாவில் அதிக உயிர்களை எடுத்து வரும் கொரோனாவின் ஆட்டம் இந்தியாவில் பலிக்காதது ஏன்? சில காரணங்கள்

Report Print Santhan in ஐரோப்பா

கொரோனா வைரஸிற்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இந்த பேரழிவில் இருந்து இந்தியா தப்பியது எப்படி என்பது குறித்து பார்ப்போம்.

சீனாவை விட ஜனநெரிசல் மிக்க இந்தியாவில் கொரோனா பரவினால், 30 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள், 20 முதல் 25 லட்சம் பேர் வரை இறப்பார்கள் என்று சில வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தனர்.

அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்.

இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. இவைகள் தான் இந்தியாவில் இருக்கும் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்து என்று கூறுகிறார், மருத்துவர் நாரேந்திர குமார் வர்மா.

எய்ம்ஸ், இந்திய ஆராய்ச்சி கழகம் போன்றவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

முதல் காரணம்

இந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அளவுக்கு அதிகமான நுண் கிருமிகள் உடலில் கலந்திருப்பதே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காரணம்.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகளையில், இந்தியாவில் ஆஸ்துமா, எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்கள் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தின.

பலவிதமான வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கெட்டதிலும் ஒரு நன்மை என்பது போல, அதிக வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் உடலில் குறிப்பிட்ட T-செல்கள் உருவாகின்றன.

இதை T-உயிரணுக்கள் என்று சொல்லலாம். அந்நிய வைரஸிடமிருந்து, நம் உடலை பாதுகாப்பதில் போர் வீரரனைப் போன்று, T-செல்கள் செயல்படுகின்றன. வெளியில் இருந்து ஏதேனும் புதுவிதமான வைரஸ்கள் நம் உடலில் நுழைந்தால்,T-செல்கள் தாக்கி அழித்துவிடும்.

இதன் காரணமே கொரோனா இந்தியாவில் தீவிரமாக பரவவில்லை. சுத்தம், சுகாதாரத்தோடு வாழும் ஐரோப்பா, அமெரிக்க நாட்டினருக்கு இது போன்ற T-செல்கள் குறைவாக இருப்பது பின்னடைவு தான், வைரஸ் நோய்களில் இருந்து மீள்வதற்கு இந்தியாவில், குளோரோகுயின், ஹைட்ராக்ஸோ குளோரோகுயின் மருந்துகளை அதிகள் அளவில் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த மருந்துகளின் வீரியம், இன்றளவும் இந்தியர்களின் உடலில் உள்ளது. இது இப்போது அவர்களுக்கு எதிர்பாரத பலனை அளித்துள்ளது.

இரண்டாவது காரணம்

இந்தியர்கள் உணவில் பயன்படுத்தும் மசால் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவை தான், மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, திப்பிளி, ஏலக்காய், கிராம்பு, புதினா, ஜாதிக்காய், கருஞ்சீரகம், இப்படி பல இருக்கின்றன.

இவை அனைத்திற்கும் தனி தனி மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆயுர்வேத இந்திய மருத்துவ முறைகளில், நறுமணப் பொருட்களின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது, பயன்படுத்தப்படும் பலவிதமான நறுமணப் பொருட்கள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.

இதை அலோபதி மருத்துவர்கள் கூட மறுக்கமாட்டார்கள், டெங்கு பரவிய போது, நிலவேம்பு குடிநீர் பயன்பட்டது. அதே போன்று இப்போது இந்தியாவில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு கபசூர குடிநீர் வந்துவிட்டது. பல வித இந்திய நறுமணப் பொருட்களை கொண்டு தயாரானது தான் இந்த கபசூர குடிநீர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டவர்கள் சீனர்களுடன் ஒப்பிடும் போது, அன்றாட உணவில் இந்தியர்கள் சேர்த்து கொள்ளும்,பொருட்கள் கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

மூன்றாவது காரணம்

உடலுக்குன் நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மரபணுக்களின் தொகுப்பு தான் Immunue System, வைரஸ்களை அழித்து நம்மை பாதுகாக்கும் Immunue System-ன் அங்கம் ஹெச்.எல்.எ ஜீன், இந்த மரபணுக்களின் வேலை என்ன என்றால், உடலில் அந்நிய வைரஸ் நுழைந்தால், ஹெச்.எல்.எ மரபணுக்கள் அடையாளம் கண்டதுடன், உடனடியாக Immunue System-ஐ உஷார் படுத்துவிடுகிறது.

அதை தொடர்ந்து T-செல்கள் போர் வீரனாக செயல்புரிந்து, அந்நிய வைரஸ்களை அழிக்கும், இதில் ஹெச்.எல்.இ மரபணுக்களின் பங்கு மிகவும் முக்கியம்.

பல வித வைரஸ் கிருமிகளால், பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடலில், சில குறிப்பிட்ட வகையான ஹெச்.எல்.எ அணுக்கள், அதிக அளவில் இருக்கின்றன.

அது போன்ற ஹெச்.எல்.எ மரபணுக்கள், ஐரோப்பிய, அமெரிக்க, சீன மக்களின் Immunue System-ல் குறைவு தான், இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக நான் நடத்திய ஆய்வில், இதை கண்டறிந்தேன் என்று நாரேந்திர குமார் வர்மா சொல்கிறார்.

கொரோனா பரவலுக்கு பிறகு, இன்னொரு முக்கியமான விஷயமும் தெரியவந்திருக்கிறது என்று கூறுகிறார் அவர், அதில், நமது உடலில் உள்ள T-செல்கள் துரிதமாக செயல்பட்டு, கொரோனா வைரஸை அழிக்கின்றன.

இதனால் கொரோனா நோயாளிகள் மிக விரைவில் மீண்டு வர முடிகிறது என்கிறார் வர்மா, உலக சுகாதார அமைப்புடன் இணைந்து பணியாற்றிய தேவதாசனும், கொரோனாவால் இந்தியாவிற்கு எந்த ஒரு ஆபத்தும் வராது என்று கூறுகிறார்.

சீனா, இத்தாலியில் நடந்த உயிர்பலிகளை பார்த்து, இந்தியர்கள் மிரண்டு போய் உள்ளனர். நாம் இத்தாலியோ, சீனாவோ அல்ல, நமது மக்கள், அங்குள்ள மரபணு ,இங்குள்ள சூழல் போன்றவை இத்தாலி, சீனாவை விட்ட முற்றிலும் மாறுபட்டவை.

அதிக மக்கள் தொகை, சுகாதாரயின்மை, அலட்சிய மனப்பான்மை போன்றவை நம்முடைய வீக் பாய்ண்ட்களாக இருந்தாலும், இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவவில்லை, அதற்கு மூன்று காரணங்களை சொல்லாம்.

கொரோனா பாதித்த நபர்கள் யாருடன் எல்லாம் தொடர்பு வைத்திருந்தார்கள், என்பதை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தியது பாராட்டுக்குரிய விஷயம், இது சமூகத்தில் நோய் பரவலை தடுத்துவிட்டது.

இந்தியாவின் வெப்பமான சீதோஷ்நிலை கொரோனாவுக்கு உகந்தது அல்ல, சீனா, ஐரோப்பாவில் பரவியது போல, இந்தியாவில் வேகமாக பரவாததற்கு இதுவும் ஒரு காரணம், மூன்றாவது முக்கியமான காரணம், சுகாதரமற்ற சுற்றுச் சூழலிலே இந்தியர்கள் வாழ பழகிக் கொண்டுவிட்டார்கள்.

இதனால் பிறப்பிலே அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, அதிகமாகவுள்ளது.

இதுவும் கொரோனா பாதிக்காதற்கு காரணம். கொரோனா பாதிக்காத நபர்களிடம் மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தால், இந்த உண்மை விளங்கும்.

இப்போதைய நிலவரத்தை ஆராயும் போது, இந்தியாவில் பல லட்சம் பேரை கொரோனா தாக்கும் என்ற யூகங்கள் எல்லாம், பொய்த்து தான் போகும், அப்படியே இந்தியாவில் பரவினாலும், பெரும்பாலானவர்கள் காய்ச்சல் மற்றும் இருமலுடன், தப்பித்துவிடுவார்கள், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது, இறப்புகள் ஏற்படலாம் சிலர் சொல்வதைப் போல லட்சங்களில் இருக்காது என்று நம்பிக்கை ஊட்டுகிறார் இந்திய மருத்துவர் தேவதாசன்.


மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்