ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லை திறப்பு: எந்தெந்த நாடுகளுக்கு அனுமதி தெரியுமா?

Report Print Fathima Fathima in ஐரோப்பா

ஜூலை 1ஆம் திகதி முதல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லையில் மீண்டும் அனுமதிக்கப்படும் நாடுகளின் பெயர்ப் பட்டியல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பாதுகாப்பு கருதி மார்ச் 17ம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிப்புற எல்லைகள் மூடப்பட்டன.

தற்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தாக்கம் குறைவாக இருப்பதாலும், பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும் வெளிப்புற எல்லையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வருகிற 1ம் திகதி முதல் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்படவிருக்கிறது, இதற்கான பட்டியல் வெளியாகியுள்ளது.

சீனா, கனடா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட 15 நாடுகள் இப்பட்டியலில் உள்ளன.

கொரோனா வைரஸின் கடும் பாதிப்பு காரணமாக, அமெரிக்கா, ரஷ்யா, பிரேசில் மற்றும் கட்டார் போன்ற நாடுகள் இப்பட்டியலில் இடம்பெறவில்லை.

அந்தந்த நாடுகளில் கொரோனா வைரசின் பரவல் நிலை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவர்களை அனுமதிக்கிறார்களா என்பதை கருத்தில் கொண்டும் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்