கொரோனா விதிமுறையைப் பின்பற்றுவதில் சர்ச்சையில் சிக்கிய கால்பந்து ஜாம்பவான் கிரிஸ்டியனோ ரொனால்டோ!

Report Print Karthi in ஐரோப்பா

கொரோனா தொற்று உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில், பிரபல கால்பந்தாட்ட வீரர் கிரிஸ்டியனோ ரொனால்டோவும் சமீபத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை மீறியுள்ளதாக இத்தாலியின் விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் வின்சென்சோ ஸ்படாஃபோரா, “ரொனால்டோ இத்தாலியிலிருந்து போர்த்துகலிருந்து விமானத்தில் பயணித்ததன் மூலம் கொரோனா சுகாதார விதிமுறைகளை மீறியுள்ளார்.” என்ற குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோவில், தான் அனைத்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றியதாகவும், ஆனால் இத்தாலியில் உள்ள ஒருவர் தன்னைப்பற்றி பொய் கூறியுள்ளார் என்றும் ரொனால்டோ கூறியுள்ளார்.

மேலும், நான் எல்லா நெறிமுறைகளையும் பின்பற்றினேன், தொடர்ந்து அவற்றைப் பின்பற்றுவேன், என் மனசாட்சி தெளிவாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதான ரொனால்டோ செவ்வாயன்று கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தார், அவர் போர்த்துகல் அணியுடன் இருந்தபோது மறுநாள் இத்தாலிக்கு ஒரு தனி ஜெட் விமானத்தில் வந்து சேர்ந்தார்.

இந்த பயணம் குறித்து, தான் தனியாகத்தான் பயணம் மேற்கொண்டதாகவும், தான் பயணித்த ஜெட் அடிப்படை மருத்துவ வசதிகளை கொண்டது எனவே அது ஒரு ஜெட் ஆம்புலன்ஸ் என்றும் அவர் கூறியுள்ளார்.

இறுதியாக தான் இது குறித்து மீண்டும் விவாதிக்கப்போவதில்லை என்றும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்றும், அவர் கூறியுள்ளார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்