அதிகரிக்கும் கொரோனா தொற்று: புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கிறார் இத்தாலி பிரதமர்

Report Print Karthi in ஐரோப்பா

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், இத்தாலியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்க இருக்கின்றது அந்நாட்டு பிரதமர் அலுவலகம்.

தனிமனிதர்களையும் தொழில் துறைகளையும் பாதிக்காத வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பிரதமர் கியூசெப் கோண்டேவின் அலுவலம் உள்ளூர் மற்றும், சுகாதார அதிகாரிகளிடையே கலந்தாலோசனையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் கொரோனா தொற்றால் முதலில் பயங்கரமாக பாதிக்கப்பட்ட நாடான இத்தாலி கடுமையான ஊடரங்கு மூலம் தொற்றிலிருந்து மீண்டது. இந்நிலையில் தற்போது தொற்றின் இரண்டாவ அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றது.

நேற்றைய நிலவரப்படி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 10,925 ஆக அதிகரித்துள்ளது. இது முன்னெப்போதையும் விட பெரிய எண்ணிக்கை என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னர் அறிவித்ததை போல கடுமையான கட்டுப்பாடுகளை அறிவிக்க அரசு தயங்கினாலும், தனி மனித இடைவெளியை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

கட்டாய முககவசம், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமாக மக்கள் கூடக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை அரசு கடந்த 10 நாட்களில் கடுமையாக்கியுள்ளது.

இந்நிலையில், அத்தியாவசியமற்ற சேவைகளான உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் போன்றவற்றை மூடும்படி புதிய கட்டுப்பாடுகள் வலியுறுத்தலாம் என சில உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ள.

இத்தாலியில் இதுவரை கொரோன தொற்றால் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல 36,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்