விமானத்திலிருந்து பயணிகளால் இறக்கி விடப்பட்ட பெண்மணி! காரணம் இதுதான்

Report Print Karthi in ஐரோப்பா
674Shares

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், அயர்லாந்தின் வடக்கு பகுதியில் முககவசம் இல்லாமல் விமானத்தில் பயணிக்க முயன்ற போது சக பயணிகளால் விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக பெண் ஒருவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட்லிருந்து எடின்பர்க்குக்கு புறப்பட இருந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் முககவசம் அணியாமல் பயணம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவர் முககசவம் அணி மறுத்துள்ளார்.

இந்நிலையில் சக பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் சம்பந்தப்பட்ட பெண்ணை வெளியேற சத்தமிடுகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த பெண் தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறுவதை காணொளி ஒன்றில் காண முடிகின்றது.

வெளியேறும்போது அந்த பெண் எல்லோரையும் பார்த்து கத்துகிறாள். நீங்கள் நிச்சயம் இறக்கப்போகிறீர்கள், அதற்கு கொரோனா மட்டுமே காரணமாக இருக்காது என்று சப்தமிடுகிறாள். மேலும், இறங்குவதற்கு முன்னர் சில இருக்கைகள் பக்கம் திரும்பி இருமுவதை போல பாவனை செய்கிறார். பின்னர் அவரை ஊழியர்கள் வெளியேற்றுகின்றனர்.

சர்ச்சைக்குரிய பெண்மணி வெளியேறும் காட்சி video credit: metro

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விவரித்த விமான நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், “ விமான நிறுவனத்தின் வழிகாட்டுதல்களின்படி, அனைத்து பயணிகளும் தங்களது முகத்தை மூடிக்கொண்டு கொண்டு வர வேண்டும், உண்ணும் போது அல்லது குடிக்கும்போது தவிர, ஏறும்போது மற்றும் பயணத்தின்போதும் முககவசம் அணிய வேண்டும்.” என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

எனவே ‘மற்ற பயணிகள் மற்றும் குழுவினருக்கு இடையூறு விளைவிக்கும் நடத்தையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.’ என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்