கடுமையான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய வேல்ஸ் முழு விவரம்!

Report Print Karthi in ஐரோப்பா
118Shares

ஐரோப்பாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது வேல்ஸ் பகுதியில் தொற்று சங்கிலியை உடைக்கும் விதமாக circuit breaker ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகள், மதுபான விடுதிகள், உணவகங்கள் உட்பட அனைத்தும் மாலை 6 மணி முதல், இரண்டு வாரங்களுக்கு மூடப்படும் என்றும் மக்கள் அரசின் உத்தரவுகளை தவறாமல் பின்பற்றுமாறும் வேல்ஸ் முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் அறிவித்துள்ளார்.

இந்த கட்டுப்பாடுகள் தொற்று பரவலை அதிரடியாக தடுக்கும் என்று குறிப்பிட்ட மார்க், இதனை பின்பற்றவில்லையெனில் மேலும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்கும், வேறு வழியின்றி வேலைக்கு செல்பவர்களை தவிர அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை வேல்ஸில் உள்ள ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வேல்ஸின் கொரோனா தொற்று புள்ளி விவரம் image credit: Getty

தொற்று தடுப்பு நடவடிக்கையாக தொடக்கப்பள்ளிகள் அடுத்த வாரத்திலிருந்து தொடங்கப்படும் என்றும், இதில் தேர்வு எழுதவுள்ள ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மார்க் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

இந்த தீவிர முழுமுடக்க உத்தரவானது நவம்பர் 9 வரை அமலில் இருக்கும் என்றும், இதற்கிடையேயான நாட்களில் நடைபெறக்கூடிய விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் மக்கள் கொண்டாட்டத்தினை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 43,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்