இதைவிட்டால் வேறு வழியில்லை... கொரோனாவை தடுக்க ஐரோப்பிய நாடுகள் கூட்டாக எடுத்த துயர முடிவு

Report Print Arbin Arbin in ஐரோப்பா

மிங்க் விலங்குகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படுவது கிரேக்கத்தில் தொடர்ந்து வருகிறது.

கொன்று குவிக்கப்பட்ட மிங்க் விலங்குகள் மொத்தமாக புதைக்கப்படும் கோர காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகி தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

மிங்க் விலங்குகளில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதியே, தற்போது அந்த விலங்குகளை கொன்று தள்ளுவதாக பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், மிங்க் விலங்குகளிடமிருந்து புதுவகை கரோனா வைரஸ் உருவாவதாகவும் இதனால் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் பின்னடைவு ஏற்படும் எனவும் டென்மார்க் பிரதமர் மெட்ட் ஃப்ரெட்ரிக்சென் தெரிவித்திருந்தார்.

மட்டுமின்றி, மிங்க் விலங்குகளால் 11 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில்,

டென்மார்க்கில் உள்ள மொத்தம் 17 மில்லியன் மிங்க் விலங்குகளையும் கொன்று தள்ள முடிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு பண்ணைகளிலும், நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதனிடையே, கிரேக்கத்தில் சில மிங்க் விலங்குகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, சுமார் 2,000 விலங்குகள் கொல்லப்பட்டன.

சுமார் 1.3 மில்லியன் மிங்க் விலங்குகளுடன் 80 க்கும் மேற்பட்ட பண்ணைகள் வடக்கு கிரேக்கத்தில் மட்டும் அமைந்துள்ளன.

ஆனால் இங்குள்ள மொத்த மிங்க் விலங்குகளும் கொல்லப்படுமா என்பது தொடர்பில் உறுதியான தகவல் வெளியாகவில்லை.

டென்மார்க், கிரேக்கம் மட்டுமின்றி, அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்திலும், மிங்க் விலங்குகளில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

டென்மார்க்கில் மட்டுமே 1,139 மிங்க் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. உலகின் 40 சதவீத ஃபர் தயாரிப்பு தேவையை டென்மார்க் மட்டுமே பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

You May Like This

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்