நாடு முழுவதும் இலவச ரேப்பிட் ஆன்டிஜென் பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ள ஐரோப்பிய நாடு

Report Print Gokulan Gokulan in ஐரோப்பா
31Shares

கொரோனா வைரஸ் தொற்றுகளைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியா, நாடு முழுவதும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தலைநகர் லுப்லஜானாவில் உள்ள ஒரு மைய சதுக்கத்தில் செவ்வாய்க்கிழமை இந்த சோதனையை தொடங்கியது. மேலும் பன்னிரண்டு நகரங்காளில் இந்த இலவச சோதனைக்கு இடங்களை நியமிக்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

லுப்லஜானாவில் மக்கள் வரிசையாக நின்று சோதனையை மேற்கொண்டுவருகின்றனர். அதன் முடிவுகள் வர 15 நிமிடங்கள் ஆகும், மேலும் மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் முடிவு வழங்கப்படுகிறது.

COVID-19 இன் அறிகுறிகளைக் காட்டாத பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு இந்த Rapid Antigen சோதனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஸ்லோவேனிய தொற்றுநோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய நாட்களில், 21 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்டுள்ள ஸ்லோவேனியா நாடு, பல வாரங்கள் கடுமையான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு புதிய நிகழ்வுகளின் எண்ணிக்கையில் சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்