உலகின் முதல் கொரோனா பாதிப்பு இத்தாலியில் கண்டறிந்துள்ளதாகவும், சீனாவின் வுஹான் நகரில் அல்ல எனவும், இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று உறுதி செய்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரம் கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் உலக மக்களுக்கு நன்கு பரிச்சயமான ஒன்றாக மாறிவிட்டது.
மொத்தமுள்ள 11 மில்லியன் மக்கள் தொகையில் ஒருவரிடம் இருந்து உலக நாடுகளை மொத்தமாக ஸ்தம்பிக்க செய்துள்ள கொரோனா பெருந்தொற்று பரவியதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்போது மிலன் பல்கலைக்கழகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி குழு ஒன்று 25 வயதான இத்தாலிய பெண் முதல் கொரோனா நோயாளியாக இருந்திருக்கலாம் என்பதை உறுதி செய்துள்ளது.
குறித்த இளம்பெண், அவரது தோலில் ஏற்பட்ட தடிப்புகள் காரணமாக 2019 நவம்பர் மாதம் மருத்துவமனையை நாடியுள்ளார்.
அவருக்கு மேற்கொண்ட விரிவான சோதனையில் RNA வைரஸின் மரபணு வரிசைமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று தொடர்பான ஆதாரங்கள் கண்டறியப்பட்ட முதல் நோயாளி இந்த இத்தாலிய பெண்ணாக இருக்க வாய்ப்பிருப்பதாகவே மிலன் பல்க்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இருப்பினும், இவர் தான் முதல் நோயாளியா என்பது தொடர்பில் உறுதி செய்வதற்கான சாத்தியங்களும் இல்லை என்றே கூறுகின்றனர்.
இருப்பினும், 2019 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இத்தாலியில் கொரோனா தொற்று இருந்திருக்க வாய்ப்பு அதிகம் என்றே ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மட்டுமின்றி 2019 டிசம்பர் மாதத்தில் இத்தாலியின் இரு முக்கிய நகரங்களின் கழிவு நீரில் கொரோனா மாதிரிகள் கண்டறிந்துள்ளதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், நவம்பர் 2019 ல், இத்தாலியில் உள்ள சில மருத்துவர்கள் விசித்திரமான நிமோனியா பரவலையும் கண்டறிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.