பிரபல ஐரோப்பிய நாட்டில் பொதுமுடக்கம் அறிமுகம்! ‘மிகவும் ஆபத்தில் இருக்கிறோம்’: பிரதமர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஐரோப்பா
153Shares

கொரோனா வைரஸ் தொற்றுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான புதிய ஊரடங்கு வெள்ளிக்கிழமை முதல் ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் நடைமுறைக்கு வரும் என்று அந்நாட்டு பிரதமர் Antonio Costa அறிவித்தார்.

தொற்றுநோயால் நாம் மிகவும் ஆபத்தான தருணத்தில் இருக்கிறோம். விதி எளிதானது தான், நாம் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்த படி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் Antonio Costa கேட்டுக்கொண்டார்.

தொற்றுநோயின் முதல் அலையின் போது கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையே விதிக்கப்பட்ட ஆறு வார ஊரடங்கு போல தான் தற்போதைய ஊரடங்கு விதிகளும் இருக்கும்.

இதைதவிர அனைத்து பொது மற்றும் தனியார் பள்ளிகளும் திறந்த நிலையில் இருக்கும்.

ஜனவரி 24 ம் திகதி போர்ச்சுகலின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளதால், அன்று மட்டும் மக்கள் வெளியில் நாடமாடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும், எனவே வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு செல்லலாம்.

கடந்த மார்ச் மாத விதிகளின் படி, அனைத்து அத்தியாவசியமற்ற வணிகங்களும் மூடப்படும்.

இருப்பினும் உணவகங்கள் பார்சல் சேவைகளை வழங்க அனுமதிக்கப்படும். பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், பேக்கரிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் வங்கிகள் திறந்திருக்கும். வணிகத்திற்கு மாநில ஆதரவு கிடைக்கும்.

வீட்டிலிருந்த படி வேலை செய்வது முடிந்தவரை கட்டாயமாக இருக்கும். புதிய நடவடிக்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய, விதிகளை மீறுவதற்கான அபராதம் இரட்டிப்பாகும்.

போர்த்துகீசிய சட்ட விதிகளின் கீழ் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் கட்டுப்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும், ஆனால் இந்த விதிகள் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்று பிரதமர் கூறினார்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்