உலகளவில் 2 மில்லியனைக் கடந்த கொரோனா மரணங்கள்! அதிகபட்சமாக ஐரோப்பாவில் 31% பதிவு!

Report Print Ragavan Ragavan in ஐரோப்பா
76Shares

உலகெங்கிலும் உள்ள கோவிட் -19 தொற்றுநோய்க்கு 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார்.

சீன நகரான வுஹானில் புதிய கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, 2020 செப்டம்பர் பிற்பகுதியில் உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 1 மில்லியனை எட்டியது.

அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட மோசமான பாதிப்புக்குள்ளான சில நாடுகளுடன், மூன்றே மாதங்களில் அந்த எண்ணிக்கை இருமடங்காக ஆகிவிட்டது. மேலும், தொற்று எண்ணிக்கை 92 மில்லியனை எட்டவுள்ளது.

2021-ஆம் ஆண்டில் இதுவரை சராசரியாக 11,900 தினசரி இறப்புகள் பதிவாகியுள்ளன என்று ஆய்வு கூறுகிறது. மேலும், கோவிட் காரணமாக தற்போது ஒவ்வொரு 8 விநாடிகளிலும் ஒருவர் இறந்து கொண்டிருக்கிறார்.

உலகின் மிக உயர்ந்த அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை அமெரிக்கா கொண்டுள்ளது. இதுவரை 386,000-க்கும் அதிகமான இறப்புகளுடன், ஒவ்வொரு நாளும் உலகளவில் பதிவாகும் ஒவ்வொரு 4 இறப்புகளில் ஒன்று அமெரிக்காவை சேர்ந்ததாக இருக்கிறது.

அடுத்த மோசமான பாதிப்புக்குள்ளான நாடுகள் - பிரேசிலில் 207,000-க்கும் அதிகமானோர், இந்தியாவில் 152,000க்கும் அதிகமானோர், மெக்ஸிகோ 138,000-க்கும் அதிகமானோர் மற்றும் பிரித்தானியா 87,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

அந்த 5 நாடுகளும் சேர்ந்து உலகின் மொத்த கோவிட் -19 இறப்புகளில் கிட்டத்தட்ட 50% இறப்புகளை கொண்டுள்ளன.

உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான ஐரோப்பா, இதுவரை 615,000-க்கும் அதிகமான இறப்புகளைப் பதிவு செய்துள்ளது மற்றும் இது உலகளவில் கோவிட் தொடர்பான அனைத்து இறப்புகளில் கிட்டத்தட்ட 31% ஆகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 5570 கொரோனா மரணங்கள் பதிவாகின்றன.

இந்த நோய் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனா, வெள்ளிக்கிழமை 130 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாத இறுதியிலிருந்து பல நாடுகள் தங்கள் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்திவருகின்றனர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் 35 மில்லியன் டோஸ் பல்வேறு கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன, அவற்றில் பல பிரித்தானியா போன்ற பணக்கார நாடுகளில் உள்ளன .

இந்தியா சனிக்கிழமையன்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டங்களில் ஒன்றைத் துவக்கியது. திட்டத்தின் முதல் நாளில் 3,000 மையங்களில் 300,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் பிரேசில் உட்பட பல வளரும் நாடுகளில், தடுப்பூசி இன்னும் தொடங்கவில்லை.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்