ஒரே ஓய்வூதிய இல்லத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரித்தானிய வகை கொரோனா உறுதி! எந்த நாட்டில் தெரியுமா?

Report Print Ragavan Ragavan in ஐரோப்பா
125Shares

பெல்ஜியம் நாட்டில் ஒரே ஓய்வூதிய இல்லத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு பிரித்தானிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், Houthulst பகுதியில் உள்ள De Groene Verte ஓய்வூதிய இல்லத்தில் 3 பேர் சமீபத்தில் இறந்தனர். அவர்களை சோதனை செய்ததில் அவர்கள் மூவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.

பிறகு, ஓய்வூதிய இல்லத்தில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அங்கு வசிக்கும் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

ஓய்வூதியத்தில் உள்ள 39 ஊழியர்கள் உட்பட மொத்தம் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் பரவக்கூடியதாகக் கருதப்படும் பிரித்தானிய வகை உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும், அந்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான 7 நாள் தனிமைப்படுத்தலுக்கு பதிலாக, 10 நாட்கள் தனிமைப்படுத்தபட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய இல்லத்தில் இருக்கும் எவரும் பிரித்தானியாவுக்கு பயணித்ததற்கான ஆதாரங்கள் இல்லை. இந்நிலையில், இவர்கள் அனைவருக்கும் எப்படி தொற்று ஏற்பட்டிருக்கும் என அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.

பெல்ஜியத்தில் இதுவரை 677,209 கொரோனா பாதிப்புகளும், 20,396 இறப்புகளும் பதிவாகியுள்ள நிலையில், மேலும் பலர் பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்