அஸ்ட்ராஜெனேகாவின் இரத்த உறைவு பிரச்சினை குறித்து முக்கிய முடிவை வெளியிட்ட ஐரோப்பா!

Report Print Ragavan Ragavan in ஐரோப்பா
0Shares

இரத்த உறைவு பிரச்சினை என்பது அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் மிக அரிய பக்க விளைவு தான் என ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் சீரமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 25 மில்லயன் ஐரோப்பியர்ககளுக்கு கோவிட்-19க்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களில் 86 பேர் மட்டுமே இந்த அரிய இரத்த உறைவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சோதனை செய்ததன் மூலம், "அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்ட இரண்டு வாரங்களுக்குள் குறைந்த அளவிலான இரத்த பிளேட்லெட்டுகள் இணைந்து ரத்த உறைவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்" இருப்பதாக EMA முடிவு செய்துள்ளது.

அதே சமயம், அஸ்ட்ராஜெனேகா தடுப்பசியில் ஆபத்தை விட, அதன் நன்மைகள் மிக மிக அதிகமாக இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துகள் சீரமைப்பு நிறுவனமான European Medicines Agency (EMA) தெரிவித்துள்ளது.

அதனால், இந்த அசாதாரண இரத்த உறைவு பிரச்சினையை மிகவும் அரிதான பக்கவிளைவுகள் என பட்டியலிடவேண்டும் என EMA வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த இரத்த உறைவு பிரச்சினை வயது மற்றும் பாலின அடிப்படியில் பாதிக்கப்படுவதாக குறிப்பிட முடியவில்லை என்றும், ஆனால் பெரும்பாலும் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு இந்த பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக EMA தெரிவித்துள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்