பக்தர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்திய முத்தமிழ் பாமாலை

Report Print Akkash in நிகழ்வுகள்

இலங்கையில் நடைபெறும் அனைத்துலக முருக பக்தி மாநாட்டில் நேற்று முருகப்பெருமானுக்கு சிறப்பான முத்தமிழ் பாமாலை வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கை வந்துள்ள இசைச் செல்வன் ஹைட்ராபாத் பா.சிவா அவர்களும், அவருடைய மாணவச் செல்வங்களும் இணைந்து முருகப் பெருமானுக்கு முத்தமிழ் பாமாலை பாடியுள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சியை பார்வையிட வந்த பக்தர்கள் மெய்மறந்து பக்தியில் மூழ்கியிருந்ததை காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிகழ்வுகள் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நேற்று மாலை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers