ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான முத்தேர் பவனி

Report Print Shalini in நிகழ்வுகள்
ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான முத்தேர் பவனி

புஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் முத்தேர் பவனி இன்று நடைபெற்றுள்ளது.

இன்று விடியற்காலை 5.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, யாக பூஜை மற்றும் 1008 சங்காபிஷேகம், பட்டு எடுத்தல் என்பன இடம்பெற்று, வசந்த மண்டப பூஜை நடைபெற்றுள்ளது.

பின்னர் திருவூஞ்சல், சுவாமி உள்வீதி வலம் வந்து மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேள தாள வாத்தியங்கள் முழங்க, மின் தீபங்கள், பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முத்தேரில் ஸ்ரீ விநாயகப் பெருமான், ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி, ஸ்ரீ துர்க்கை அம்மன் சகிதம் முத்தேர் பவனி வீதி உலா நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments