கனடிய அரசியல் தலைவர்கள் வாழ்த்திய தமிழ் நிகழ்வு!

Report Print Murali Murali in நிகழ்வுகள்
கனடிய அரசியல் தலைவர்கள் வாழ்த்திய தமிழ் நிகழ்வு!
154Shares

ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலாச்சார விழா 4வது தொடர் வருடமாக நடை பெற்றது.

கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடி என்ற இந்த நிகழ்வு மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கனடிய பிரதமர் மாண்புமிகு யஸ்ரின் ருடோ, எதிர்கட்சித் தலைவர்கள் மாண்புமிகு ரோனா அம்புரோஸ் மற்றும் பேட்ரிக் பிரௌன் ஆகியோருடன் பல மாகாண அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துச் செய்திகளையும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உணவுச்சாவடிகள், மலிவு விலை வர்த்தகச் சாவடிகள், தமிழர் பாரம்பரிய கண்காட்சி, தமிழர் கலைநிகழ்வுகள் என ஈழம் சாவடி ஒவ்வொரு நாளும் அனைத்து இன மக்களுக்கும் பெருவிருந்தாக அமைந்திருந்தது.

உங்களுடைய நிகழ்வுக்கும் ஊடக அனுசரணையை பெற்றுக்கொள்ள pr@lankasri.com எனும் இணையத்தள முகவரிக்கு எழுதவும்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments