கூத்து கலைக்கு உயிர் கொடுக்கும் கிழக்கு இளைஞர் யுவதிகள்!

Report Print Kari in நிகழ்வுகள்

மறைந்து போகும் தமிழர்களின் பண்பாட்டு கலையான கூத்து கலைக்கு உயிர் கொடுக்கும் வகையில் கிழக்கு இளைஞர் யுவதிகளின் கூத்து இன்று மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இடம் பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடம் ஏற்பாடு செய்த இந்த கூத்து நிகழ்வில் கறுவாக்கேணி விக்னேஸ்வர வித்தியாலய மாணவர்களால் மிகவும் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.

கிழக்கு மாகாணம் என்றாலே கலை கலாச்சாரம் என பெயர் போன மாகாணமாக திகழ்கின்றமை யாராலும் மறுக்க முடியாத ஒன்று அந்த வகையில் தமிழர்களின் பழமையான கலையான கூத்து என்பது வரலாற்று சரித்திரங்களை வெளிப்படுத்தும் ஒரு கலையாகும்.

பாடசாலைகளில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் வண்ணம் சமூகத்தில் ஆளுமையாக வாழ்வதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கமாகவே இந்த கலையை வளர்த்து வருகின்றோம் எனகூத்து கலை ஆசிரியர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments