வெகு சிறப்பாக நடந்து முடிந்த ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானத்தின் அலங்கார உற்சவம்

Report Print Oli Pictures Oli Pictures in நிகழ்வுகள்
45Shares
45Shares
ibctamil.com

Sri Kalpaga Hindu Culture Association அமைப்பினரால் பரிபாலனம் செய்யப்பட்டு வரும் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தானம் வேலஸ் துர்முகி வருட அலங்கார உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரத்துடன் விநாயகப் பெருமான் எழுந்தருளி அடியவர்களுட்கு அருளிய அருட்காடசிகள் அனைவரையும் பக்தி கடலில் மூழ்க வைத்துள்ளது.

துர்முகி வருடத்திற்கான அலங்கார உற்சவம் 21-07-2016 வியாழக்கிழமை அன்று பூர்வாங்க கிரிகைகளுடன் ஆரம்பமாகி மறுநாள் 22-07-2016 வெள்ளிக்கிழமை மாலை சிவஸ்ரீ ச.சண்முகபிரத குருக்கள் தலைமையில் நந்திக்கொடியும் Neath Port Talbot Councillor Tony Taylor அவர்கள் Wales தேசிய கொடியையும் ஏற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து 11 தினங்கள் முறையே ஓம்கார ரூபக்காட்சி, லக்ஷ்மி கணபதி அருட்காட்சி, பால கணபதி அருட்காட்சி, மயூரேச கணபதி அருட்காட்சி, பக்த முக்தி பாவனோற்சவம், வசந்தோற்சவம், வீர கணபதி (திருவேடடை) அருட்காட்சி, விஸ்வரூப கணபதி (சகோபுரம்) அருட்காட்சி, ராஜகணபதி (தேர் திருவிழா) அருட்காட்சி, பாவவிமோசன கணபதி (தீர்த்தோற்சவம்) அருட்காட்சி, நர்த்தன கணபதி (பூங்காவனம்) அருட்காட்சி, என்பன இடம்பெற்றன.

பூர்த்தி தினமாகிய 02-08-2016 செவ்வாய்கிழமை பைரவர் உற்சவம், சண்டேஸ்வரர் உற்சவம் மிக விமர்சையாக நடைபெற்றது. அன்று கடந்த 11 தினங்களிலும் Swansea, Cardiff, London, Liverpool, High Wycombe என பிரித்தானியாவின் பல பாகங்களில் இருந்து கல்பகா கலையரங்கில் கலை நிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசில்களும் கௌரவங்களும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பாவிலேயே உற்சவத்தின் போது சமுத்திரத்தில் (Aberavan Beach) தீர்த்தோற்சவம் செய்யப்படும் ஓர் ஆலயம் என்பதும் அதற்கேற்ற வகையில் தனது அமைவிடத்தை விநாயகரே தேர்ந்து அமைத்துக்கொண்டதும் சிறப்பம்சமாகும். இவ்வருட உற்சவத்தில் வானம்பாடி யோகராஜ் அவர்களின் புதல்வன் யோகா தினேஷ் தலைமையில் வானம்பாடிகள் வில்லிசைக்குழுவினர் அரங்கேறியதும், தேர் உற்சவத்தின் அன்று நாதஸ்வர தவில் வாத்தியங்களுடன் கேரள செண்டை வாத்தியங்களும் இசைத்தமை இந்த உற்சவத்தின் சிறப்புக்களாகும்.

Sri Kalpaga Hindu Culture Association அமைப்பின் ஸ்தாபகரும் ஆலய குருவும் ஆகிய சிவஸ்ரீ ச.லம்போதரகுமாரசாமிக்குருக்கள் அவர்களும் உற்சவகுரு, மலேசியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட மங்கள வாத்திய கலைஞர்கள், அடியவர்கள் என அனைவரும் துர்முகி வருட அலங்கார உற்சவத்தை தரிசித்த மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் அடுத்து வரவுள்ள ஹேவிளம்பி வருட அலங்கார உற்சவத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அடுத்த வருட உற்சவம் 21-07-2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 29-07-2017 சனிக்கிழமை தேர் உற்சவமும், 30-07-2017 ஞாயிறுக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறும் என்பதையும் ஆவலுடன் Sri Kalpaga Hindu Culture Association அமைப்பினர் தெரிவித்தனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments