சுவிஸில் முதன்முறையாக இலங்கை கலாசார, வர்த்தக உணவுப் பெருவிழா

Report Print Steephen Steephen in நிகழ்வுகள்
677Shares
677Shares
ibctamil.com

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இலங்கையின் கலாசார, வர்த்தக மற்றும் உணவு பெருவிழாவை நடத்த உள்ளது.

இந்த விழா எதிர்வரும் 09, 10, 11 திகதிகளில் நடைபெறவுள்ளதாக துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

மேற்படி பெருவிழாவிற்கான அனுமதி இலவசம், விழாவில் 60 வீத இலங்கையர்களும், 40 வீதமான சுவிஸ் பிரஜைகளும் என 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் துணைத் தூதுவர் விதர்சன முனசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சுவிஸ் வாழ் இலங்கை மக்களின் ஏகோபித்த ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரு விழாவில் இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இலங்கையின் வங்கிகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, ஏற்றுமதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், ஆயுர்வேத நிறுவனங்கள், விமான போக்குவரத்து நிறுவனங்கள், அழகு சாதன, அழகு கலை நிறுவனங்கள், தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உட்பட சுவிட்சர்லாந்தின் பல்வேறு நிறுவனங்களும் கலந்து கொள்ளவுள்ளன.

இலங்கையின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் சிறப்பாக வெளிக்கொணரும் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தி முடிக்க அனைவரது ஆதரவை வேண்டி நிற்பதாக விதர்சன முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த படைப்புக்கு லங்காசிறி ஊடக அனுசரணை வழங்குகிறது. உங்களுடைய படைப்புகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் pr@lankasri.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

நிகழ்வுக்கான அரங்குகள் பயன்பாட்டுக்கு உள்ளன. தேவைப்படும் வர்த்தகர்கள் இந்த 004177 9289422 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments