வவுனியா விபுலானந்தா கல்லூரியின் நூல் வெளியீடும் பரிசளிப்பு விழாவும்!

Report Print Gajan in நிகழ்வுகள்

வவுனியா - பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு நேற்று(18) இடம்பெற்றள்ளது.

குறித்த நிகழ்வு கல்லூரி அதிபர் சு.அமிர்தலிங்கம் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்லூரியின் பரிசளிப்பு நிகழ்வானது நீண்டகாலங்களின் பின் கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் அயராத முயற்சியின் பயனாக நடாத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பரிசளிப்பு நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த போதும் அவர் அங்கு பங்குபற்ற முடியவில்லை எனவும் வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, ம.தியாகராஜா வவுனியா நகர கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜ், இந்து மதகுரு சிவஸ்ரீ.தியாக சக்திதரகுருக்கள், கிறிஸ்தவ மதகுரு அருட்பணி லகஸ்டன் டி.சில்வா மற்றும் உதவிக்கல்வி பணிப்பாளர்கள் அயல் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பரிசளிப்பு நிகழ்வின் போது 2015இல் பாடசாலை மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கபட்டன. அதேபோன்று நீண்ட கால இடைவெளியின் பின் கல்லூரியின் விபுலம் என்னும் சஞ்சிகையின் நான்காவது இதழ் பதினொரு வருடங்களின் பின் வெளியீடும் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2000 ஆண்டில் முதன் முதல் வெளிவந்த இந்த விபுலம் சஞ்சிகையின் இரண்டாவது இதழ் 2003 ஆம் ஆண்டு மூன்றாவது இதழும் 2005ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் நீண்ட கால இடைவெளியின் பின் நான்காவது இதழ் இந்த வருடம் வெளிவந்துள்ளது.

கல்லூரி அதிபரின் ஆலோசனையின் பேரில் இதழாசிரியர் ம.பிரதீபன் நெறியாள்கையில் சு.ரதீஸ்வரன் அட்டைபடத்துடன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரது ஆக்கங்களை தாங்கி உருவாக்கப்பட்ட இந்த சஞ்சிகையினை கல்லூரி அதிபர் சு. அமிர்தலிங்கம் வெளியீடு செய்து வைத்து சிறப்பு பிரதிகளுக்கு வழங்கி வைத்துள்ளார்.

தொடர்ந்து சஞ்சிகையின் விமர்சன உரையை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய இந்து நாகரிக ஆசிரியர் ரமேஷ் நிகழ்த்தியுள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments