அறிவு பெருகி ஆற்றல் மிகுவோம்: வெற்றிகரமாக நிறைவு

Report Print Thirumal Thirumal in நிகழ்வுகள்
23Shares
23Shares
lankasrimarket.com

“அறிவு பெருகி ஆற்றல் மிகுவோம்” என்ற தொணிப்பொருளில் இடம்பெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவின் இரண்டு நாள் அமர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன.

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரனின் தலைமையில் நுவரெலியாவில் கடந்த 7 மற்றும் 8ஆம் தினங்களில் குறித்த அமர்வுகள் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வின்போது, சாகித்திய விழா அமர்வுகள் இரண்டு அரங்குகளாக இடம்பெற்றது, மலையகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், தமிழ் அன்னை தேர் பவனி, தோட்ட தொழிலாளர்களின் கலை அம்சங்கள் போன்ற பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுடன் குறித்த அரங்குகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளின்போது, மத்திய மாகாண ஆளுநர், முதலமைச்சர், கண்டி இந்திய உயர்ஸ்தானிகர், தலைவர், மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்