திருகோணமலையில் சிம்பனி இசை நிகழ்வு

Report Print Victor in நிகழ்வுகள்
114Shares
114Shares
lankasrimarket.com

இலங்கைக்கான சீனநாட்டு தூதுவராலயம், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு மற்றும்கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து நடத்திய டியன்ஜான் சிம்பனி இசை நிகழ்வு திருகோணமலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது சீனபல்லிய நிகழ்வும் அதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண பன்மைத்துவ கலாச்சார நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், விழாவின் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகம, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம், மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார உட்பட கலை இலக்கிய இசை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்