மனித நேய கரங்கள் அமைப்பின் கார்த்திகை தீபத்திருவிழா

Report Print Kumar in நிகழ்வுகள்

மட்டக்களப்பு மனித நேய கரங்கள் அமைப்பும், கனடாவின் தமிழ் மனித நேய கரங்கள் அமைப்பும் இணைந்து ஏற்பாடுசெய்த கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, இன்றைய தினம்(03) மாலை நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில், மட்டக்களப்பு மனித நேய கரங்கள் அமைப்பின் தலைவர் சு.ஜெயமுரளி தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கனடா தமிழ் மனித நேயகரங்கள் அமைப்பின் உறுப்பினர் சு.சனார்த்தனி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கார்த்திகை தீபத்திருவிழாவினை குறிக்கும் வகையில் ஆயிரம் விளக்குகள் ஒளியேற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த விழாவில் நாட்டிய நிகழ்வுடன் தெய்வீக இசைக்கச்சேரிகள் இடம்பெற்றதுடன், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்