நயினை நாகபூசணி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்

Report Print Yathu in நிகழ்வுகள்
392Shares
392Shares
lankasrimarket.com

கிளிநொச்சி - இராமநாதபுரம், புதுக்காடு நயினை நாகபூசணி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது, இதன்போது விசேட பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.

யுத்த காலத்தில் பாதிப்படைந்த இந்த ஆலயம் பல இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் ஆலயத்தில் கும்பாபிசேக பூஜைகள் இடம்பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து, இறுதியில் ஆலய அறங்காவல் சபையால் ஆலயம் கட்டிய கலைஞர் வர்ண பூச்சாளர், ஆலய அந்தணர்கள் உள்ளிட்டவர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த நிகழ்வில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நாகபூசணி அம்பாளின் அருளை பெற்றுகொண்டுள்ளனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்