கோலாகலமாக நடைபெற்ற யாழ் நாகதம்பிரான் கப்பல் திருவிழா

Report Print Kavitha in நிகழ்வுகள்
60Shares
60Shares
ibctamil.com

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆறாம் திருவிழவான கப்பல் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தின் கப்பல் திருவிழா புரட்டாசி மாத பூரணையின் பின் வருகின்ற பிரதமை திதியில் வருடாவருடம் நடைபெறுகின்றது.

மேலும் இலங்கையிலுள்ள சிவதலங்கள் எதிலும் இக்கப்பல் திருவிழா கொண்டாடப்படுவதில்லை. ஆனால், நாகர்கோவில் கிராமத்தில் மட்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் இத்திருவிழா ஊர் மக்களால் பிரமாண்டமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்