யாழில் ஆரம்பமான உலக சுற்றுலா தின நிகழ்வு கொண்டாட்டம்

Report Print Kavitha in நிகழ்வுகள்
21Shares

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும், சுற்றுலாவில் நாட்டின் பொருளாதாரமும் உண்டு என்பதை விவரிக்கும் நோக்கிலும் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் வடக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்கவும், அதனூடாக வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதுமே இச்செயற்பாடுகளின் பிரதான நோக்கமாக உலக சுற்றுலா தின ( World Tourism Day ) நிகழ்வு இன்று யாழில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிகழ்வின் முதல் நாள் நிகழ்வு நேற்று (26) ஊடகவியலாளர்கள், பருத்தித்துறை வெளிச்சவீடு, சந்நிதி கோவில், நிலாவறை கிணறு, கீரிமலை நீருற்று, கீரிமலை கோவில் உள்ளிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள சுற்றுலா தலங்கள் பலவற்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நேற்று (26) இந்நிகழ்வுகள் ஆரம்பமாகி நாளையுடன் (28) நிறைவு பெறுகின்றன.

இந்நிகழ்வுகளில் சிறப்புரைகள் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில், ‘சுற்றுலாத்துறை மற்றும் டிஜிட்டல் மயமாதலும்’ எனும் தலைப்பில் குழு கலந்துரையாடல், டயலொக் நிறுவனத்தின் Ngage தொழில்நுட்பம் சார்ந்த கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளதோடு, யாழ் மாநகர சபை மைதானத்தில், விசேட கலாசார நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இன்றைய தினம் உலக சுற்றுலா தின உத்தியோகபூர்வ சிறப்பு நிகழ்வுகளில், சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட அமைச்சர்கள், வடமாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சும் வடமாகாண சபையும் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வுகளை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து(SLTDA) இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம், (SLTPB), இலங்கை சுற்றுலாத்துறை மற்றும் இறுதிப்போட்டியில் முகாமைத்துவ கல்வி நிறுவனம் (SLITHM), இலங்கை மாநாட்டு பணியகம், வடமாகாண சுற்றுலாத் துறை பணியகம் மற்றும் யாழ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்