கல்லடி அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்
24Shares

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் அமைந்திருக்கும் பழமை வாய்ந்த ஆலயமான மட்டக்களப்பு கல்லடி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

ஆலய பங்குத்தந்தை அருட்பணி றோசான் அடிகளாரின் ,தலைமையில் இன்று மாலை நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வினை தொடர்ந்து விசேட திருப்பலி அருட்பணி நவரெட்ணம் அடிகளாரினால் ஒப்புகொடுக்கப்பட்டது.

திருவிழா நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.30 மணிக்கு திருச்செபமாலையும்,திருப்பலியும் இடம்பெறும்.

எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை மாலை அன்னையின் திருவுருவ பவனியும் தொடர்ந்து விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்படும்

திருவிழாத் திருப்பலி எதிர்வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 07.15 மணிக்கு அருட்பணி லோரன்ஸ் அடிகளார் தலைமையில் ஒப்புகொடுக்கப்படும் .

ஆலய கொடியேற்ற திருவிழா திருப்பலியில் பங்கு மக்கள் கலந்து சிறப்பித்தனர்

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்