தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் சூழ தேரோட்டப் பெருவிழா

Report Print Kumar in நிகழ்வுகள்
41Shares

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் மத்தியில் இன்று வெகுவிமர்சையாக இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் உள்ள ஈச்சரங்களில் ஒன்றாகவும், தானாக தோன்றிய ஆலயங்களில் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 11ஆம் திகதி அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு தேரோட்டப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல நூற்றாண்டு பழைமைவாய்ந்த மரச்சில்லுகளால் உருவாக்கப்பட்ட இரண்டு தேர்கள் வடம் பூட்டி வீதிவுலா வந்து அடியார்களுக்கு அருள் வழங்கின.

இதேவேளை, கல்நந்தி புல்லுண்டு போர்த்துக்கீசரை உதைத்து கல்லாகிய அற்புத திருத்தலமாக திகழ்ந்துகொண்டிருக்கும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயமானது கிழக்கு மாகாணத்தின் தேரோடும் ஆலயம் என்னும் பெருமையினையும் கொண்டு விளங்கி வருகின்றது.

மேலும், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோயில் தேரோட்ட விழா பழமையான தமிழர் பாரம்பரிய பண்பாடுகளை பிரதிபலிக்கும் மஹோற்சவப் பெருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்