கொரோனா பாதிப்பிலிருந்து நாடு விடுபட வேண்டி கொழும்பில் விசேட யாகம்!

Report Print Sinan in நிகழ்வுகள்
487Shares

கொழும்பு - கொட்டாஞ்சேனை கல்பொத்தை வீதியில் அமையப்பெற்ற ஸ்ரீ ஞானபைரவர் ஆலயத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து இலங்கை நாடு விடுபட வேண்டி விசேட யாகம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததுடன், நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது பூசைகளை ரவிசந்திர குருக்கள் நடத்தியிருந்ததுடன், பிரதமரின் இந்துமத இணைப்பாளர் ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, சிவநேசன் சர்மா, ஆலய பிரதம குரு சந்திரரூபன் சர்மா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்