பல்லாயிரம் பக்தகோடிகள் புடைசூழ இரதோற்சவம் கண்டான் நல்லைக் கந்தன்

Report Print Dias Dias in நிகழ்வுகள்
1163Shares

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகாேற்சவ திருவிழாவின் இரதோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக ஸ்ரீ சண்முகப்பெருமானாக எழுந்தருளிய பெருந்தேரானது இழுக்கத் தொடங்கி மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்தது.

அடியவர்களின் வசதி கருதி இன்று பிற்பகல் 2 மணிவரை சண்முகப்பெருமானை தரிசிக்க முடியும் என ஆலய தர்மகர்த்தா கூறியுள்ளார்.

கொரோனா சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக இம்முறை நல்லைக் கந்தன் தேரேறுவானா என்கிற பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் ஏக்கத்திற்கான முடிவாக கந்தன் தேரேறி சிறப்பாக சுற்றி வந்தான்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்