கொரோனாவிற்கு பின் பிரமாண்டமான முறையில் ஒன்று கூடும் இசைக்குழுக்கள்

Report Print Sinan in நிகழ்வுகள்
369Shares

கொரோனாவிற்கு பின் பிரமாண்டமான முறையில் ஒன்று கூடும் இசைக்குழுக்கள் நிகழ்ச்சி ஒன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

பிரபலமான 30 பாடகர்கள் நான்கு பிரபலமான இசைக் குழுக்களை ஒன்றாக இணைக்கும் ‘back 2 music’ என்ற இந்த இசை நிகழ்ச்சி ஆரா என்டர்டெயின்மன்ட் ஏற்பாட்டில் சுகாதார நடைமுறைகளுடன் நடைபெறுகின்றது.

இதற்கமையசமூக இடைவெளியை பேணும் வகையில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் 2020ம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி, கொழும்பு விகாரமஹாதேவி திறந்த வெளியரங்கில் மாலை 06.00 மணி முதல் இடம்பெறவுள்ளது.

நான்கு இசைக் குழுக்களுக்களும் நான்கு வெவ்வேறு நேரங்களில் நிகழ்ச்சியை வழங்கவுள்ளதோடு, ஒவ்வொரு இசைக் குழுவும் ஒவ்வொரு விதமாக இசையை வழங்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்