மலையகத்திற்கு களமிறங்கிய கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியம் மற்றும் லயண்ஸ் கழகம் (PHOTOS)

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்
391Shares

லங்காசிறி ஊடக நிறுவனத்தின் அணுசரனையில் கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியமும், கொழும்பு கிராண்ட்வே லயன்ஸ் கழகமும் இணைந்து முதல் முறையாக மலையகத்தில் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது தெரிவு செய்யப்பட்ட ஐந்நூறிற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் தலா 10 Kg அரிசி மற்றும் 5Kg மா போன்றவற்றை 1,000,000 ரூபாய் நிதியில் இம்மாதம் 5ஆம், 6ஆம் திகதிகளில் பகிர்ந்தளித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள லிந்துல, மெராய்யா, தங்கக்கலை, சென்கூம்ஸ் பகுதிகளுக்கும் ஹட்டன் - கரோலினா, வட்டவலை, லொநெக், புரூட்ஹில், வெலிஓயா, போடைஸ், ஒற்றரி, இன்வொரி, ஹட்டன் பரிசுத்த ஆலய வளாகம் மற்றும் நாவலப்பிட்டிய வெஸ்ட் ஹோல் பகுதி மக்களுக்கே இவ்வுலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் இலங்கை அரிமா கழகம் 306B 1 வட்டாராம் 3ன் தலைவர் லயன் ஜெயப்ரகாஷ், கொழும்பு கிராண்ட்வே லயன்ஸ் கழகத்தின் தலைவர் பாஸ்கரன் மஹாமணி, சேவை திட்ட தலைவர் லயன் பத்மநாதன், சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் தலைவர் லயன் ஷிராஜ், லயன் விஜயன், லயன் வித்யரூபன், லயன் கமல் மற்றும் ஹட்டன் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சார்ள்ஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி வைத்துள்ளனர்.

இதன்போது கனடா செந்தில்குமரன் நிதியில் 723,000 ரூபாயும் இலங்கை லயன்ஸ் கழகத்தின் பங்களிப்பாக 277,000 ரூபாய் உள்ளடங்கலாக 1,000,000 ரூபாய் மொத்த நிதி பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்