அழகுப்புயலாக கனடாவை கலக்கிய குட்டி இளவரசி

Report Print Deepthi Deepthi in நவீன அழகு

இளஞ்சிவப்பு நிற கன்னம், சிவப்பு நிற உதடு, கோணவாக்கில் வகுந்ததெடுத்த ஹேர்ஸ்டைல் என அழகுப்புயலாக வந்து கனடிய மக்களை கலக்கியுள்ளார் பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லோட்.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு தற்போது 1 வயது பூர்த்தியாகிவிட்டது. தற்போது முதல் முறையாக தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

குட்டி இளவரசி நீல நிறத்தில் கவுன் அணிந்து, அந்த ஆடைக்கு ஏற்றவாறு கடும் நீல நிறத்தில் கிளிப் அணிந்திருந்தார்.

ஆனால், குட்டி இளவரசி அணிந்திருந்த ஆடை 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆடை என்றும் பிரித்தானிய அரச குடும்பத்தின் குழந்தைகள் எப்போது பழைய காலத்து ஆடைகளையே அணிகிறார்கள் என சிலர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், ஒரு ராஜகுடும்பத்தின் வாரிசு என்ற முறையில் அவர் அணிந்திருந்த ஆடை அவான் அழகுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

பளிச் கலர், அளவுக்கதிமான அழகு ஒப்பனைகள் என்று இல்லாமல், மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்ட கவுன் அணிந்திருந்தார்.

இதுபோன்ற ஆடைகள் ராஜகுடும்பத்தினருக்காவே தயாரிக்கப்பட்டது போன்று இருக்கும். இந்த கவுன்களில் அதிக வடிவமைப்புகள் இல்லாமல் இருந்தாலும், அந்த துணியின் தரம் மிகச்சிறந்ததாக இருக்கும்.

பொதுவாக குட்டிக்குழந்தைகளுக்கு, Polyster போன்று பளபளக்கும் ஆடைகள் அணிந்தால், அது அவர்களின் தூக்கத்தை கெடுத்து எரிச்சலை ஏற்படுத்தும். எனவே பயணத்தின்போதும், குழந்தைகள் தூங்கும்போதும் பருத்தியில் செய்யப்பட்ட ஆடைகளையே அணிய வேண்டும்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments