நடிகை தமன்னாவின் ப்யூட்டி சீக்ரெட்ஸ்! அவரே சொல்றார் கேளுங்க

Report Print Printha in நவீன அழகு

தமன்னா என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அவருடைய கலர் தான்.

எப்படிப்பா இவ்ளோ வெள்ளையா இருக்காங்க என பலரும் முணுமுணுத்திருப்போம்.

சூப்பரான நடிப்பால் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார் தமன்னா.

சினிமாவுக்கு வந்த போது எப்படி இருந்தாரோ அதைப்போலத்தான் இப்பவும் இருக்கிறார்.

அதை பற்றி அவரே சொல்லும் சீக்ரெட்ஸ்,

 • சைவப் பிரியர் என்பதால் எப்போதும் என்னுடைய உணவில் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவேன்.
 • தயிரின் தீவிர ரசிகர் நான், தயிரில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால், நமது உடம்பிற்கு மிகவும் நல்லது எனவே தயிரை நான் அதிகமாக சேர்த்துக் கொள்வேன்.
 • எண்ணெயில் வறுத்த உணவுப் பொருட்களை நான் அதிகமாக விரும்புவதில்லை, அதனால் நான் அதை சாப்பிடாமல் தவிர்த்து விடுவேன்.
 • உடம்பில் நீரேற்றம் அதிகரிக்கச் செய்யும் சத்துக்கள் நிறைந்த பழச்சாறுகள் மற்றும் இயற்கை உணவுகளை மட்டுமே தினமும் சாப்பிடுவேன்.
 • தினமும் இரவில் பாதாமை நீரில் ஊறவைத்தும், காலையில் வெறும் வயிற்றில் சுடுநீரில் தேன் கலந்தும் சாப்பிட்டு வருவேன்.
 • தினமும் காலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சிகள் மற்றும் யோகா போன்ற ஆரோக்கியமான பயிற்சிகளை செய்து வருகின்றேன்.
 • தினமும் இரவில் ஆறு மணி நேரம் நிம்மதியான உறக்கத்தை நான் ஏற்படுத்துக் கொள்வேன். இதற்கு முக்கிய காரணம் என் மனதில் எந்தவிதமான குழப்பத்தையும் வைத்துக் கொள்வதில்லை.
 • நான் அதிகமாக சர்க்கரை மற்றும் சர்க்கரை கலந்த எந்த உணவுப் பொருட்களையும் விரும்புவதில்லை.
 • நான் சூட்டிங் நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் மேக்கப் போடவே மாட்டேன்.
 • தினமும் என்னுடைய சருமம் மற்றும் முகத்திற்கு கடலைமாவு, வேம்பு மற்றும் மஞ்சள் போன்ற பொருட்களை மட்டும் தான் பயன்படுத்துவேன்.
 • தலை முடிக்கு ஷாம்புக்களை பயன்படுத்த மாட்டேன். அதற்கு பதிலாக, இயற்கையாக தயாரித்த சிகைக்காய், பப்பாளி, நெல்லிக்காய் போன்ற பொருட்களை தான் பயன்படுத்துவேன்.
 • தினமும் இரவில் தூங்கச் செல்லும் முன், என் முகத்தில் இருக்கும் மேக்கப்பை மறக்காமல் குளிர்ந்த நீரில் கலைத்து விடுவேன்.
 • என் அழகிற்கு மிகவும் முக்கிய காரணம் என்னுடைய சிரிப்பு தான். நான் எப்போதும் என்னுடைய சிரிப்பை மட்டும் மறக்க மாட்டேன்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments