அஜித்தை பெண்களுக்கு பிடிக்க என்ன காரணம்?

Report Print Deepthi Deepthi in நவீன அழகு

இந்தியாவில் உள்ள அழகிய ஆண்மகன்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். அஜித் நடந்தால் அழகு, பார்த்தால் அழகு, சிரித்தால் அழகு, இதில் அவர் அணியும் ஆடை அழகோ அழகு.

கம்பீரமாய் நடந்துவரும் அவரது நடையே, இளவட்ட பெண்களை அவர் பின்னால் சுற்றவைத்துவிடும்.

பெண்கள் பின்னால் சுற்றாமல், பெண்ணே சுற்றும் பேரழகன் இவர்தான்.

வெள்ளை நிறத்தில் இருப்பதால் மட்டும் இவர் அழகு கிடையாது, மாறாக அதற்கு ஏற்றவாறு இவர் அணியும் ஆடை.

பில்லா படத்தில் இவர் அணிந்திருக்கும் கோட், இவருக்காகவே பார்த்து பார்த்து தயார் செய்தது போன்று இருக்கும். கோட்டாக இருந்தாலும் சரி, வேஷ்டி சட்டையாக இருந்தாலும் சரி.

வீரம் படத்தில் அவர் அணிந்திருந்த வேஷ்டி சட்டை, அவரின் கதாபாத்திரத்திற்கு நச்சென்று பொருந்தியிருந்தது.

சினிமாவில் சால்ட் அன்ட் பெப்பர் லுக் கெட்டப்பை முதன் முதலாக ஏற்று நடித்து, அதன் மூலம் எக்கச்சக்க பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்தார்.

குறிப்பாக சால்ட் அன்ட் பெப்பர் லுக், பிற நடிகர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இவருக்கே கனகச்சிதமாக பொருந்தியிருந்தது.

திரைப்படங்களாக இருந்தாலும் சரி, ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் சரி, தனது உடல்வாகுக்கு எவ்வித ஆடைகள் பொருந்துமோ, அதனை சரியாக தெரிவு செய்து அணிகிறார்.

ஆடை பாதி, அழகு பாதி என்பதை, ஆடை பாதி ஆண்கள் பாதி என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

கடைகளில் எவ்வித புதிய ஆடைகள் வந்தாலும், முந்தியடித்து சென்று அதனை வாங்கி அணியாதீர்கள்.

முதலில் அந்த ஆடை உங்களுக்கு பிட்டாக இருக்குமா? அதனை அணிந்தால் உங்கள் அழகு அதிகரிக்குமா? பெண்கள் விரும்பும் ஆண்களாக மாறுவீர்களா என்பதை ஆராயுங்கள்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்