பெண்கள் என்றாலே பொதுவாக அழகின் வடிவம்தான் என்றாலும், ஜாப்பானிய பெண்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது.
ஜப்பான் பெண்கள் என்றாலே நம் நினைவிற்கு வருவது அவர்களின் உடை அலங்காரமும், சிறிய குடையும்தான்.
அத்தகைய ஜப்பான் பெண்கள் மிகவும் அழகாக இருப்பதற்கு காரணம் என்ன என்பதை தெரிந்து கொண்டு நீங்களும் அதை பின்பற்றினால் சருமம் என்றும் பொலிவுடன் இருக்கும்.
இளமையுடன் இருக்க
ஜப்பானிய பெண்கள் பழங்கள் மற்றும் மீன்களை அதிகமாக உணவில் சேர்த்து கொள்வார்கள். ஏனெனில் மீனில் ஒமேகா 3 மற்றும் விட்டமின் ஈ சருமத்தை இளமையோடு வைத்து கொள்ள உதவுகின்றன. இதனால்தான் அவர்களின் சருமம் இளமையாக இருக்கிறது.
சருமத்தைப் பாதுகாக்க
ஜப்பானிய பெண்கள் சந்தன எண்ணெய், லாவெண்டர் எண்ணெயை சருமத்திற்கு அன்றாடம் பயன்படுத்துகிறார்கள். மேலும் மேக்கப்பை அகற்றவும் இவற்றை உபயோக்கப்படுத்துகிறார்கள். சரும துவாரங்களை சுருக்கி, சருமத்தை இறுக்கமடைய வைக்கும்.
சருமம் சேதமமைவதை தடுக்க
அவர்கள் அதிகமாக வெய்யிலில் அலைவதை அவர்கள் விரும்புவதில்லை.ஏனெனில் வெயிலின் சக்திவாய்ந்த கதிர்கள் சருமத்தை மோசமடைய வைக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.மேலும் அவர்கள் வெயிலில் போனால் சன் ஸ்கீரின் உபயோகிப்பார்கள்.
முகச்சுருக்கம் வரமால் இருக்க
அரிசி ஊறிய நீர் உள்ள மினரல்கள் மற்றும் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் சருமத்துளைகளால் உறிஞ்சப்பட்டு சருமத்திற்கு தேவையான பொலிவை தருகின்றது. இவை முகச்சுருக்கத்திலிருந்து நம்மை பாதுகாப்பதோடு, சருமத்திற்கு புத்துணர்வு அளித்து என்றும் இளமையாக வைக்க உதவுகின்றது.
முக அழகிற்கு
சருமத்தை மெருகூட்டும் ரோஸ் வாட்டர் போன்ற டோனரை அவர்கள் காலங்காலமாக உபயோகப்படுத்துகிறார்கள். ஒரு மஸ்லின் போன்ற மெல்லிய துணியில் டோனரை நனைத்து முகத்தில் முகமூடி போல போட்டு 10 நிமிடங்கள் கழித்து எடுக்கிறார்கள்.