முடி அடர்த்தியாக வளர இதெல்லாம் சாப்பிடுங்க

Report Print Jayapradha in நவீன அழகு

நமது தலையில் உள்ள ஒவ்வொரு முடியின் இழையும் புரோட்டீனால் நிற்கிறது. இந்த புரோட்டீனை தான் கெராட்டீன் என்று கூறுவார்கள். இது நமது உடலை முடியின் இழைகளோடு இணைக்கிறது.

நம் உடலுக்கு தேவையான புரோட்டீன் இல்லாமல் இருக்கும் போது, முடியிழைகளின் வலிமை குறைந்து, முடியானது உதிரத் தொடங்கும்.

மேலும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே முடியின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

கேரட்

கேரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டவும் மற்றும் தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியைத் தூண்டி, தலையில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

முட்டை

முட்டையில் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. அத்தகைய முட்டையில் உள்ள வெள்ளைப் பகுதியில் அல்புமின் என்ற புரதம் கூந்தல் வளர்ச்சிக்கும் மற்றும் பயோட்டின் என்கிற வைட்டமின் முடி உதிர்வைக் கட்டுபடுத்தவும் உதவுகின்றன.

பீன்ஸ்

பீன்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, சி மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளதால் இவை தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும்.

பசலைக் கீரை

பசலைக் கீரையில் உள்ள மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், ஒமெகா 3 கொழுப்பு அமிலங்கள் தலை முடிக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பதோடு முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.

நட்ஸ்

நட்ஸில் அதிக அளவு துத்தநாகம், பயோட்டின், புரோட்டீன், இரும்புச்சத்து உள்ளன. குறிப்பாக, புரோட்டீன் தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்சில் உள்ள சத்துக்கள் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. மேலும் ஓட்ஸில் முடி வளர்ச்சிக்குத் தேவையான பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளதால் இவை முடி வேகமாகவும் கறுமையான நிறத்திலும் வளரவும் உதவுகின்றன.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் உள்ள புரதம், தாமிரம், இரும்புச்சத்தும் ஆகியவை முடி கொட்டுவதைத் தவிர்க்க உதவுவதுடன் முடிக்கும் சருமத்துக்கும் ஆரோக்கியத்தைத் தருகின்றன.

சூரிய காந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகளில் பையோட்டின், வைட்டமின் பி, இ, புரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், கால்சியம், செலினியம் போன்ற தலைமுடியைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்துகள் உள்ளன.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers