தொடையில் உள்ள அதிக சதைகளை குறைக்க வேண்டுமா? இதோ எளிய தீர்வு

Report Print Jayapradha in நவீன அழகு

சிலருக்கு என்னதான் உடலை பிட்டாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களின் வயிற்றுக்கு அடுத்தபடியாக தொடையில் அதிக சதை போடும்.

எனவே தொடையில் உள்ள சதையினை குறைப்பதற்கு சில உடற்பயிற்சிகளையும், உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நடைபயிற்சி

அலுவலகத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்த்து அடிக்கடி சிறு நேரம் நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

நீச்சல் அடித்தல்

நீச்சல் அடிப்பதன் மூலம் தொடையில் மட்டுமின்றி உடலின் அனைத்து பாகங்களிலும் உள்ள கொழுப்புக்களை கரைக்கலாம்.மேலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு நீச்சல் மிகவும் சிறந்த உடற்பயிற்சி.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் தொடை சிக்கென்று இருக்கும். ஏனெனில் நார்ச்சத்துள்ள உணவுகள் போதுமான ஆற்றலை வழங்கி ஒருவரை சுறுசுறுப்புடன் இருக்க உதவும்.

மிளகாய்

அன்றாட உணவுகளில் மிளகாயை சேர்த்து உட்கொண்டு வருவதன் மூலம் தொடை மற்றும் அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும். இதற்கு மிளகாயில் உள்ள உட்பொருட்கள் தான் காரணம்.

தண்ணீர்

உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது தண்ணீரை அதிகம் பருக வேண்டும். இதனால் உடலின் ஆற்றல் மேம்படுத்தப்பட்டு கொழுப்புக்கள் வேகமாக கரைக்கப்படும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம், கொழுப்புக்கள் வேகமாக கரைய உதவும். மேலும் ஸ்நாக்ஸ் நேரங்களிலும் சிட்ரஸ் பழங்களை உட்கொண்டு வருவது மிகவும் நல்லது.

புரோட்டீன் உணவுகள்

தொடையில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும் போது தினமும் 2-3 வகையான புரோட்டீன் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதனால் தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க உடலுக்கு வேண்டிய போதுமான அளவு ஆற்றல் கிடைக்கும்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers