தனது அசாத்திய நடிப்பால் வட இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை தீபிகா படுகோனோ, நடிகர் ரன்வீர் சிங்கை காதல் திருமணம் செய்துகொண்டார்.
திருமண அலங்காரத்திற்கு மட்டும் சுமார் 1 கோடி ரூபாய் செலவில் நகைகள் வாங்கியுள்ளார்.
இத்தாலியில் மிக பிரமாண்டமாக இவர்களது திருமணம் நடைபெற்றது.
திருமணத்தையொட்டி சுமார் ஒரு மாதத்துக்கு படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுத்திருந்தார் தீபிகா. இந்நிலையில் அமெரிக்க இதழ் ஒன்றின் அட்டைப்படத்துக்கு படுகவர்ச்சியாக தீபிகா படுகோன் போஸ் அளித்திருப்பது ரசிகர்களின் புருவத்தை உயர வைத்துள்ளது.
சிங்கிள் பீஸ் நீச்சல் உடை அணிந்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
தீபிகாவின் படுகவர்ச்சியான காலழகை ரசிர்கள் விமர்சித்து வருகிறார்கள். திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியாக நடிப்பேன் என்பதை இந்த புகைப்படத்தின் மூலம் காட்டியுள்ளார்.