வெளிநாட்டில் அழகிகள் கலந்து கொண்ட போட்டி: வியக்கவைத்த இலங்கை பெண்.. வைரல் வீடியோ

Report Print Raju Raju in நவீன அழகு

தாய்லாந்தில் நடைபெற்ற சிறந்த தேசிய ஆடை அணிவோருக்கான போட்டியில் 93 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் கலந்து கொண்ட நிலையில் இலங்கையை சேர்ந்த பெண்ணும் கலந்து கொண்டு அசத்தினார்.

Pattaya நகரில் இரு தினங்களுக்கு முன்னர் சிறந்த தேசிய ஆடை அணிவோருக்கான மிஸ் யூனிவர்ஸ் போட்டி நடைபெற்றது.

இதில் 93 நாடுகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்ட நிலையில், ஆசியாவை சேர்ந்த 20 பெண்கள் இதில் கலந்து கொண்டார்கள்.

இவர்கள் எல்லாம் மேடையில் ஆரவாரத்துக்கு இடையில் வித்தியாசமான கண்களை கவரும் ஆடைகளை அணிந்து கொண்டு ஒய்யாரமாக நடை போட்டார்கள்.

இதில் இலங்கையை சேர்ந்த இளம் பெண்ணும் கலந்து கொண்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதன் இறுதி போட்டி வரும் 17-ஆம் திகதி பாங்காக்கில் உள்ள பெரிய இம்பேக்ட் அரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்