யாழில் கைலாசநாதரின் மைந்தன் கைலாச வாகனத்தில் கம்பீரமாக வருகின்றான்!

Report Print Shalini in விழா
119Shares
119Shares
ibctamil.com

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 20ஆம் நாளான இன்று மாலை நல்லூர் கந்தன் கைலாச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றார்.

20ஆம் நாளான இன்று காலை சந்தான கோபாலர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து மாலையில் வள்ளி தெய்வானையுடன் கைலாச வாகனத்தில் கம்பீரமாக வருகின்றான் கைலாச நாதரின் மைந்தன்.

கடந்த 28ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறும்.

இந்த திருவிழாவை காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகின்றமை சிறப்பம்சமாகும்.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்