34 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பூ மழை! மகிழ்ச்சியில் மக்கள்

Report Print Thirumal Thirumal in விழா
516Shares
516Shares
ibctamil.com

கொட்டகலை - டிரேட்டன் தோட்டம் கே.ஓ டிவிசன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று இடம்பெற்றது.

இன்று காலை கணபதி வழிபாடுகளுடன் 7.30 மணி முதல் சுப முகூர்த்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் பி.திகாம்பரம் ஹெலிகொப்டர் மூலம் ஆலயத்துக்கு மலர் தூவி வழிபாடு செய்தார்.

இதனால் வானில் இருந்து வந்த பூ மழையால் மலையக மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்ததுடன், வானத்தை நோக்கி பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

இந்த பூ மழையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் மகிழ்ச்சியடைந்தனர்.

அத்தோடு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வன் ஜீவன் தொண்டமான் ஆகியோர் வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்