நுவரெலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தின் மண்டலாபிஷேக நிகழ்வு

Report Print Vethu Vethu in விழா
நுவரெலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தின் மண்டலாபிஷேக நிகழ்வு
146Shares

நுவரெலியா ஆவா எலிய ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 18ம் திகதி இனிதே நிறைவேறியது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற மண்டலாபிஷேகத்தின் நிறைவு நாளாகிய இன்று சங்காபிஷேகம் (1008) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய பரிபாலன சபையின் தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இதன்போது இந்தியா பாண்டிச் சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ சக்கரம் ஒன்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயமொன்றில் ஸ்ரீ சக்கரம் ஒன்று பிரதிஷ்டை செய்யும் பொழுது இந்த ஆலயத்தின் தெய்வீகத் தன்மை அதிகரிக்கும் அதேவேளை அதை வணங்கும் போது சகல நன்மைகளையும் ஸ்ரீ சக்கரம் தரும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். அதன்படி இந்தியா பாண்டிச் சேரி பிரதேசத்தின் பிரபல ஜோதிடரான பாலகிருஸ்ணன் அவர்களின் அன்பளிப்பாக கிடைத்த ஸ்ரீ சக்கரம் இன்று சீதையம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விஷேட பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றது.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments