விமர்சையாக நடந்த ஸ்ரீவி. ஆண்டாள் கோவில் 9ஆம் நாள் தேரோட்டத் திருவிழா

Report Print Kalam Kalam in விழா
37Shares

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர விழா கடந்த யூலை 27ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 9 ஆம் நாள் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. வஸ்திரங்கள் அணிந்த படி ஆண்டாள் , ரெங்கமன்னார் தேரில் எழிந்தருள பக்தர்கள் தேரினை இழுத்து சென்ற காட்சி கண்களை கவர்ந்தது.

ரத வீதி வழியாக வந்த தேரில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசனம் செய்தனர்.

மேலும், உயர் நீதிமன்ற நீதிபதி மாலா, கோகுல்தாஸ், மாவட்ட நீதிபதி தாரணி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் ஆகியோரும் ஐ.ஜி முருகன், டி.ஐ.ஜி ஆனந்தகுமார், அறநிலைய துறை இணை இயக்குநர் செந்தில் வேலன் உட்பட ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிசார் எஸ்.பி ராஜராஜன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments