லண்டன் வோல்தம்ஸ்ரோ "கற்பகபதி" கற்பக விநாயகர் ஆலய நிருத்த உபசார உற்சவம்

Report Print Oli Pictures Oli Pictures in விழா
37Shares
37Shares
lankasrimarket.com

லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதியில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் கற்பக விநாயகர் ஆலய துர்முகி வருட பிரமோற்சவம் 15-08-2016 கொடியற்றத்துடன் விமர்சையாக ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

சைவப்புலவர் சிவஸ்ரீ பா. வசந்தன் குருக்கள் தலைமையில் அறங்காவலர்கள், தொண்டர்கள், அடியவர்கள் என அனைவரது ஒத்துழைப்புடன் விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

தினமும் ஒவ்வொரு உற்சவம் என்ற வரிசையில் 18-06-2016 அன்று நிருத்த உபசார உற்சவம் நடைபெற்றது.

அன்றைய தினம் திருமதி பத்மினி குணசீலன் ஆசிரியையின் மாணவிகளின் நாட்டிய உபசாரத்துடன் கற்பக பெருமான் நாக வாகனத்தில் எழுந்தளிய அலங்கார காட்சி அடியவர்கள் மனங்களில் நிறைந்து நின்றது.

பதினைந்து தினங்கள் நடைபெறும் திருவிழாவில் 28-08-2016 ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழாவும் 29-08-2016 திங்கடகிழமை தீர்தோற்சவமும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments