கேரளாவின் ஸ்பெஷல்: ஓணம் பண்டிகையின் சிறப்பு

Report Print Printha in விழா
49Shares
49Shares
ibctamil.com

இந்தியாவின் தென் தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா தான் ஓணம் பண்டிகை. இதுவே கேரளாவின் அறுவடை திருநாள் என்று அழைக்கப்படுகிறது.

கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்று எனவும் குறிப்புகளில் உள்ளது.

ஓணம் ஸ்பெஷல் உணவுகள்

கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது.

புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என பல வகையான உணவுகள் தயார் செய்து கடவுளுக்குப் படைப்பார்கள்.

இதில் பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக இஞ்சிக்கறி, இஞ்சிப்புளி ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வர்கள்.

ஓணம் ஸ்பெஷல் பூக்கோலம்

ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் போடுவார்கள்.

முதல் நாள் ஒரே வகையான பூக்கள், இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வார்கள்.

ஓணம் ஸ்பெஷல் ஆடைகள்

ஓணம் பண்டிகையின் போது பெண்கள் கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்தும், பாடல்கள் பாடி கொண்டாடி மகிழ்வார்கள்.

10 நாட்களாக நடைபெறும் இந்த ஓணம் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். அதில் முக்கியமாக களறி, படகுப் போட்டிகள் மற்றும் பாரம்பரிய நடனப் போட்டிகள் போன்றவைகள் நடைபெறும்.

மேலும் விழா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்