பதவிக்காலத்தை நிறைவு செய்தார் ரகுராம் ராஜன்: ரிசர்வ் வங்கி சுதந்திரமாக செயல்படவில்லை என பேச்சு!

Report Print Kalam Kalam in நிதி

நாட்டின் இருபத்து மூன்றாவது ரிசர்வ் வங்கி ஆளுனராக கடந்த 3 ஆண்டுகள் பணியாற்றிய ரகுராம் ராஜன் இன்றுடன் தன் பணிக்காலத்தை நிறைவு செய்தார். இதையொட்டி மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவருக்கு இரவு விருந்து அளித்து கவுரவித்தார்.

பின்னர் புது டெல்லியில் நடைப்பெற்ற கல்லூரி விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசிடம் உள்ள காரணத்தால் வங்கியால் சிறப்பாக செயல்படமுடியவில்லை.

ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை உறுதி செய்வதே தற்போதைய முக்கிய தேவையாக உள்ளது என கூறிப்பிட்ட அவர் மத்திய, மாநில அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை அரிய சந்தர்பத்தில் மட்டுமே ரிசர்வ் வங்கி எடுத்தது என கூறிப்பிட்டுள்ளார்.

அரசின் நிர்வாகம் அடிக்கடி ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தில் தலையிடுவதால் பல தொழில் ரீதியான முடிவுகளை எடுப்பதில் தடங்களும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. பட்ஜெட், லைசன்ஸ் போன்ற விஷயங்களில் முக்கிய முடிவு எடுக்கும் போது அது அரசு எற்படுத்திய முன்னாள் அதிகாரிகள் கொண்ட குழுவால் கண்காணிக்கபடுகிறது என கூறியுள்ளார்,

ரிசர்வ் வங்கியின் ஆளுனராக தனது கடைசி உரையை இன்று நிகழ்த்திய ரகுராம் ராஜன், 2008ல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட விஷயத்தை அதற்கு முன் கூட்டியே கணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிதி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments