பிரபல தொழிலதிபரான லட்சுமி மிட்டல் ஹார்வர்டு பல்கலைகழகத்தின் தெற்காசிய மையத்துக்கு நன்கொடையாக 25 மல்லியன் டொலரை வழங்கியுள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தெற்காசிய மையம் தொடங்கப்பட்டது.
தெற்காசிய நாடுகளான இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவுகள், மியான்மர், நேபாள், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவதற்காக தொடங்கப்பட்டது.
இம்மையத்துக்கு நன்கொடையாக பிரபல தொழிலதிபரான லட்சுமி மிட்டல் 25 மில்லியன் டொலரை வழங்கியுள்ளார்.
இதனால் தெற்காசிய மையம் இனிமேல் லட்சுமி மிட்டல் தெற்காசிய மையம் என்று அழைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து தெற்காசிய மையத்தின் இயக்குனரான Tarun Khanna கூறுகையில், மிட்டல் குடும்பத்தாரிடமிருந்து வந்த உதவியை நினைத்து பெருமைப்படுகிறோம், அறிவியல், சமூகம் மற்றும் மனிதம் பற்றி நாங்கள் கற்கவும், கற்றுக்கொடுக்கவும் ஏதுவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.