அழகான பெல்லியை பெறுவதற்கு சூப்பரான டிப்ஸ்!

Report Print Printha in உடற்பயிற்சி

நமது உடம்பில் கொழுப்புகள் அனைத்தும் அதிகமாக சேரும் இடம் தான் பெல்லி. எனவே பெல்லியில் இருக்கும் கொழுப்புகளைக் குறைத்து, கவர்ச்சியான மற்றும் அழகான பெல்லியை பெறுவதற்கு சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

கவர்ச்சியான பெல்லிக்கு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

முதலில் நம்முடைய இரண்டு கால்களை ஊன்றி உட்கார்ந்துக் கொண்டு, இரண்டு கைகளையும் தலையின் மீது வைத்து, தரையில் படுத்து எழுந்து இருக்க வேண்டும்.

இதனால் நமது வயிற்றுப் பகுதியில் இருக்கும் கொழுப்புகள் குறையும், எனவே இதே போல 20 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.

தரையில் நேராக படுத்துக் கொண்டு வயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்து, இரண்டு கால்களையும் 90 டிகிரி அளவிற்கு நேராக தூக்க வேண்டும்.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்வதால், வயிறு மற்றும் தொடைப் பகுதியில் இருக்கும் கொழுப்புகள் குறைகிறது.

சமநிலையில் இருக்கும் தரையில் படுத்துக் கொண்டு சைக்கிளிங் முறையை போல் இந்த உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.

இரண்டு கைகளை தலையில் வைத்து, ஒரு வலது காலை தூக்கி, இடது புறமாகவும், இடது காலை தூக்கி, வலது புறமாகவும் 10 நிமிடம் வரை செய்ய வேண்டும்.

தரையில் அமர்ந்து கொண்டு இரண்டு கால்களை தூக்கி, இரண்டு கைகளையும் காலின் முட்டியில் வைத்து படகு போன்று V வடிவில் அமர்ந்துக் கொண்டு 10 நிமிடம் வரை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஸ்கிப்பிங் ஒரு அற்புதமான இதய பயிற்சியாகும். இந்த பயிற்சியைஒ தினமும் தொடர்ந்து செய்து வந்தால், தொடை, வயிறு, இடுப்பு போன்ற பகுதியில் இருக்கும் கொழுப்புகள் கரைந்து ஸ்லிமான தோற்றத்தை கொடுக்கிறது.

நம்முடைய முழு உடலையும் தரையின் மீது படாதவாறு, புஷ்,அப் முறையில் இந்த ப்யிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது, நமடுஹ் கால்களின் விரல்கள் மற்றும் கைகள் மட்டுமே தரையை தொட வேண்டும்.

நின்று கொண்டு ஓடுவது போல இருக்கும் இந்த பயிற்சியை ஒரு கை மற்றும் கால்களை தூக்கி செய்ய வேண்டும். இதனால் தொடை மற்றும் வயிற்றுப் பகுதியின் கொழுப்புகள் குறைகிறது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments