30 வயதை கடந்த பெண்கள்: இதை செய்தால் உடல் எடை குறையும்

Report Print Printha in உடற்பயிற்சி

குழந்தை பிறந்த பின் முப்பது வயதினை கடந்த அனைத்து பெண்களுக்கும் உடல் எடை அதிகரிப்பது என்பது இயல்பானது.

ஆனால் சில எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் அத்தகைய உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையை குறைக்க முடியும்.

பெல்வீக் லிஃப்ட்டிங் வித் சிங்கிள் லெக் (Pelvic lifting with single leg)

தரையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு இடுப்புப் பகுதி தரையில் படாதவாறு, காலை மடக்கித் தரையிலும், கைகள் உடலுக்குப் பக்கவாட்டிலும், வலது காலை மட்டும் மேலே நீட்டி, தரையில் இருந்து, மூன்று அடி உயர்த்த வேண்டும்.

பலன்கள்

  • வயிற்றுப் பகுதி சதைகள் குறையும்.

  • முதுகுத்தண்டு பகுதிகள் வலிமையாகும்.

ஹிப் அவுட்டர், ஹிப் இன்னர் (hip abductor and adductor exercises)

வலது பக்கமாக ஒருக்களித்துப் படுத்து கொண்டு, வலது கையால் தலையைத் தாங்கி, இடது கையை மடித்து, முன்பக்கம் தரையில் வைத்து, இடது காலை 10 முறை முயன்ற வரை மேலே உயர்த்தி இறக்க வேண்டும். இதை இடது பக்கமும் செய்ய வேண்டும்.

பலன்கள்

  • வயிற்றுப் பகுதியில் உள்ள சதைகள் குறையும்.

  • இடுப்பு மற்றும் தொடைப் பகுதி சதைகள் வலிமையாகும்.

சூப்பர் மேன் (Super man)

தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு கைகளை முன்பக்கம் நீட்டி, கால்களைத் தரையில் படாதவாறு, உயர்த்திக் கொள்ள வேண்டும். இதே நிலையில் இரண்டு நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

பலன்கள்

  • இதயம் வலிமை பெறும்.

  • முதுகுத் தண்டின் சக்தி அதிகமாகும்.

  • தொடைப் பகுதியில் உள்ள சதை வலிமையாகும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments